ஊரில் உள்ள கட்டும்ப மானத்தை எல்லாம் வீதிக்கு கொண்டு வருவதற்கு என்ன வழியென்று பார்த்தார்கள் சேனல் நடத்துபவர்கள்.. ஒரு காலத்தில் நடிகை லட்சுமியை வைத்து ‘கதையல்ல நிஜம்’ என்கிற நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள்.. அதுகூட ஓரளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் சொலும் வகையில் இருந்தது என்று சொல்லலாம். ஆனாலும் ஒருகட்டத்தில் அதைக்கூட தேவையில்லாத ஒன்று என நிறுத்திவிட்டார்கள்..
சில வருடங்களுக்கு முன்பு ஏதோ ஒரு சேனல் லட்சுமி ராமகிருஷ்ணனை வைத்து ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்கிற பெயரில் தினந்தோறும் ஒரு நாலாந்தர நாடகத்தை நடஹ்த ஆரம்பித்தார்கள்.. இதற்கு டி.ஆர்.பி ரேட்டிங் எகிற, அந்தம்மாவுக்கும் நல்ல பப்ளிசிட்டி கிடைத்தது..
அடடே இது நல்ல பிசினஸ் ஆக இருக்கிறதே என இன்று முக்கிய சேனல்கள் எல்லாம் மார்க்கெட் போய் ரிட்டையர்டு ஆகி உட்கார்ந்திருக்கும் குஷ்பு, ஊர்வசி, கீதா போன்ற நடிகைகளை எல்லாம் அழைத்துவந்து இதேபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள்.. இந்த நடிகைகளும் தங்களை தீர்ப்பு சொல்லும் ஜட்ஜ் ஆக நினைத்துக்கொள்வது தான் வேடிக்கை.
ஆனால் கருத்து கண்ணாத்தாக்கள் என சொல்லப்படும் ராதிகா, ஸ்ரீபிரியா போன்றவர்களுக்கே இந்த நிகழ்ச்சி குமட்டலை ஏற்படுத்தியுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. இருவரும் இந்த நிகழ்சி நடத்தும் நடிகைகளை சகட்டுமேனிக்கு லெப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளார்கள்.. குறிப்பாக அவர்கள் நீதிபதி போல நந்துகொள்ளும் ஆணவப்போக்கையும் கண்டித்துள்ளார்கள்.