ஏற்கனவே பல வருட காலம் சினிமாவில் பழம் தின்று கொட்டை போட்ட நடிகைகள் தங்களது மகள்களை கதாநாயகிகளாக்கி அழகு பார்க்க ஆசைப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் ஆசையிருக்கு தாசில் பண்ண.. அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்கிற கதையாக நடிகையின் வாரிசுகள் யாரும் பெரிய அளவில் சோபித்ததாக வரலாறு இல்லை.
லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிக்கெல்லாம் ஜோடியாக நடித்தாரே என பழங்கதையை எல்லாம் இழுத்தால் சண்டைக்கு வந்துவிடுவீர்கள்.. சமீப காலத்தில் அப்படி நடிகைகளாக அறிமுகமான நடிகை ராதாவின் வாரிசுகளின் நிலைதான் மற்ற நடிகைகளுக்கு வாரிசுகளை களத்தில் இறக்கவேண்டுமா என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.. (மேனகா மகள் கீர்த்தி சுரேஷுக்கு கிளிக் ஆனது அவரது அழகு தோற்றத்துக்காகத்தான்)
ஆனால் ஹீரோயின் என்கிற டிசைனுக்குள் அடங்காத முகத்தோற்றம் கொண்ட ராதாவின் மூத்த மகளுக்கு முதல் படம் வெற்றி பெற்றதுமே தலைகால் புரியவில்லை.. அப்புறம் அவரின் யதார்த்த நிலையை ‘அன்னக்கொடி’ மூலமாக இயக்குனர் இமயம் புரிய வைத்தபின் தான், அவருக்கு தான் ஒரு பட்டா போட முடியாத புறம்போக்கு என்பது தெரிந்தது..
அடுத்து ராதாவின் சின்ன மகள் மணிரத்னம் இயக்கத்தில் அறிமுகமாகி, அதன்பின் இன்னொரு பெயர் புரியாத படத்தில் நடித்து அக்காவின் ராசிதான் தனக்கும் என அக்காவுக்கு துணையாக வீட்டில் அடங்கிவிட்டார்.. இதனால் தற்போது தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்தலாம் என யோசனையில் இறங்கியிருக்கும் மூக்கழகி ஸ்ரீதேவி, ராதாவின் மகள்களின் நிலையை பார்த்து ஜெர்க் ஆகியிருக்கிறார்.
காரணம் ஸ்ரீதேவியின் மகள் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லாம் இல்லை. அவசரப்பட்டு தனது மகளை ஹீரோயின் ஆக்கினால் இரண்டு மூன்று படங்கள் தனது முகத்துக்காக வாய்ப்பு தருவார்கள்.. படம் ஓடினால் சரி.. ஓடாவிட்டால் வீட்டோடு உட்காரவைத்து அழகு பார்க்கவேண்டியதுதான்.
அதுமட்டுமல்ல.. இந்தியாவின் நம்பர் ஒன் நடிகை என பெயர் வாங்கிய அவர், தனது மகளுக்கு அப்படி ஒரு நிலைமை வருவதை விட பேசாமால் அவரை ஹீரோயினாக்காமல் சினிமாவில் வேறு துறையில் அறிமுகப்படுத்தலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறாராம். மற்றபடி மணிரத்னம் படத்தில் துல்கர் ஜோடியாக தனது மகளை அறிமுகப்படுத்த போவதாக வரும் செய்திகளையும் அச்சத்துடன் தான் பார்த்து வருகிறாராம் ஸ்ரீதேவி.