கடந்த வெள்ளிக்கிழமையன்று காத்தி, தமன்னா நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்திற்கு ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமல்ல, படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தமன்னாவின் மைல்டான காமெடி கலந்த கேரக்டரும் ரசிகர்களிடம் பேசப்படுகிறது.. இதனால் தமன்ன உட்பட பலரும் மகிழ்ச்சியில் திளைக்க, நடிகை ஸ்ருதிஹாசன் மட்டும் வருத்தத்தில் இருக்கிறாராம்.
இதில் ஸ்ருதிக்கு என்ன வருத்தம் வேண்டிக்கிடக்கு என்கிறீர்களா..? பின்னே இருக்காதா..? இந்தப்படம் ஆரம்பித்தபோது இதில் கதாநாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தமானது ஸ்ருதிஹாசன் தானே.. படப்பிடிப்பு ஆரபிப்பதற்கு ந திடீரென வேதாளம்’ படத்தில் அஜித்துடன் நடிக்க வாய்ப்பு தேடிவந்ததால் சொல்லாமல் கொள்ளாமல் இந்தப்படத்தில் இருந்து கழண்டு கொண்டார்..
அதன்பின் கமல் மகள் என்பதால் அவர் செய்த இந்த முட்டாள்தனமான காரியம் பெரிதாக்கப்படாமல் அப்படியே அமுங்கிப்போனது. அதன்பின் தான் தமன்னா கதாநாயகியாக மாறினார். வேதாளம் ஹிட் படம் என்று சொல்லப்பட்டாலும் அதி ஸ்ருதிஹாசன் வெறும் நான்கைந்து காட்சிகளில் மட்டுமே வந்துபோவார்.. ஆனால் இந்தப்படத்தில் தமன்னா படம் முழுவதும் ட்ராவல் பண்ணுகிறார்..
பணம் எல்லா படத்திற்கும் தான் கொடுக்கிறார்கள்..? ஆனால் நல்ல கேரக்டர்களும் பாரட்டுக்களும் நாமாக தேடிக்கொள்வதுதானே என்பது இப்போதாவது ஸ்ருதிக்கு உரைத்திருக்கும் என நம்புவோம்.