இன்னொரு தடவை இப்படி நடந்ததுன்னா.. பாடகிக்கு வந்த எச்சரிக்கை..!


கடந்த சில மாதங்களுக்கு முன் பின்னணி பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ‘சுசி லேக்ஸ்’ என்கிற பெயரில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது ஞாபகமிருக்கலாம். அதற்காக திரையுலகில் இருந்து சுசியின் மீது ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தன. அவரோ தான் இதை செய்யவில்லை என கெஞ்சி கூத்தாடினார்..

அதன்பின் அந்த விஷயம் அப்படியே அமுங்கி போனது.. இப்போது மீண்டும் சுசி டிவிட்டரில் பிஸியாக ஆகிவிட்டார்.. தான் பாடிய பாடல் ஒன்றை தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார் சுசி. இதனை பார்த்து அரண்டுபோன சில நடிகைகள் சுசியை போனில் அழைத்து, பாடல்களை வெளியிடுவதோடு நிறுத்திக்கொள்.. தேவையில்லாமல் மீண்டும் எங்களது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டால் இந்தமுறை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்ல, திரையுலகினர் நடத்தும் எந்த பார்ட்டியிலும் சுசியை உள்ளே நுழைய விடவேண்டாம் என்கிற வாய்மொழி உத்தரவும் பார்ட்டி நடத்துபவர்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறதாம்.