சின்னச்சின்ன ரோல்களில் நடித்தும் ஒரு பாட்டுக்கும் ஆடியும் தனது இருப்பை தக்கவைத்துக்கொண்டு இருப்பவர் நடிகை சுஜா வாருணீ.. சமீபத்தில் வெளியான ‘குற்றம் 23’ படத்திலும் நடித்திருந்தார்.
‘ஈரம்’ அறிவழகன் இயக்கும் படம் என்பதால் தனக்கு நல்ல ஸ்கோப் கிடைக்கும் என இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்..(சேட்டை மற்றும் கிடாரி படங்களில் என்ன ஸ்கோப் இருந்தது என அந்த படங்களுக்கு ஒத்து கொண்டார் என்பது வேறு விஷயம் என எண்ணி கொள்வோம்)..
பல நாட்கள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு, பல காட்சிகளில் நடித்தாராம்.. ஆனால் படத்தில் அவர் வந்ததோ ஒரே ஒரு காட்சியில், அதுவும் சில நொடிகள் மட்டுமே.. படத்தின் முதல் நாள் காட்சியை தியேட்டரில் இதை பார்த்ததும் அதிர்ச்சியில் உடன் வந்த தோழியரிடம் குமுறலை வெளிப்படுத்தியபடி, பாதியிலேயே எழுந்து, கண்களை துடைத்தபடி தியேட்டரை விட்டு வெளியேறினாராம் சுஜா.