சமுத்திரக்கனியை சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி நேர்மையின் அடையாளமாகவே பார்க்கிறார்கள்.. இரண்டு இடங்களிலும் அவர் உருவாக்கி வைத்துள்ள பிம்பம் அப்படிப்பட்டது. அதனால் அவர் ரஜினி முருகன், பாயும் புலி ஆகிய படங்களில் வில்லனாக நடித்தபோது கூட ரசிகர்கள் இவர் ஏன் இப்படிப்பட்ட படங்களில் நடிக்கிறார் என்று சற்றே கோபப்பட கூட செய்தார்கள்.
இயக்குனர் பாலா கூட தொண்டன் பட விழாவில், “சமுத்திரக்கனி நல்லாத்தான் போய்ட்டு இருந்தான். அந்த ரெண்டு படம் மட்டும் தப்பா பண்ணிட்டான். இனி அந்த மாதிரி பண்ணமாட்டான்” என பேசினார்.. சமுத்திரக்கனியும் கூட இனிமேல் வில்லனாக நடிப்பதில்லை என முடிவெடுத்து விட்டார் என்று சொல்லப்பட்டு வந்தது..
ஆனால் இப்போது மீண்டும் வில்லனாக நடிக்க இருக்கிறாராம் சமுத்திரக்கனி. ஆம்..பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம் உதயநிதி. ஏற்கனவே சமுத்திரக்கனியை மலையாளத்தில் மோகன்லால் படத்தில் வில்லனாக நடிக்கவைத்தவர் தான் பிரியதர்ஷன்.. அதனால் இப்போது தமிழிலும் அவரை வில்லனாக்கியுள்ளாராம்