சைரா படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது சூப்பர் குட் பிலிம்ஸ்


சைரா நரசிம்மா ரெட்டி என்ற படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி, இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ளது இந்த சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படம்.

ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார்.

இவர்களுடன் நயன்தாராவும் நடித்துள்ளார். திரைக்கு வர தயாராக உள்ள இத்திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. பல வெற்றி படங்களை தயாரித்தும், வெளியிட்டிருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ‘சைரா’ படத்தின் தமிழக உரிமையை பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.