சூப்பர் ஸ்டாரின் 168 வது படத்தின் தலைப்பு அறிவிப்பு!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் திரைப்படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் மீனா கீர்த்தி சுரேஷ் குஷ்பு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். விவசாயத்தை மையமாகக்கொண்டு கிராம பின்னணியில் படம் உருவாகி வருகிறது.

இப்படத்திற்கு மன்னவன், வியூகம், அண்ணாத்த போன்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் திரைப்படத்திற்கான தலைப்பினை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

#Thalaivar168 is #Annaatthe#அண்ணாத்த@rajinikanth@directorsiva@KeerthyOfficial@immancomposer@prakashraaj@khushsundar@[email protected]/GtaYEoKf6N

— Sun Pictures (@sunpictures) February 24, 2020

இத்திரைப்படத்திற்கு “அண்ணாத்த” என்று பெயரிட்டு,வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.