சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு ஒளிப்பதிவு மேற்கொண்டவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.
தர்பார் படம் வேலைகளுக்கு இடையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இவர் தான் ஏற்கனவே இயக்கி ஜாக் அண்ட் ஜில் என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பு பணிகளையும் கவனித்து வந்தார்.
மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகனாக காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினியிடம் இந்த படத்தில் மஞ்சு வாரியர் நடித்த சில காட்சிகளை போட்டு காட்டியுள்ளார். அதில் பரதநாட்டியம் சம்பந்தமான ஒரு சில காட்சிகளில் மஞ்சுவாரியர் நடிப்பை பார்த்து பிரமித்துப்போன ரஜினி, அவரது நடிப்பை சந்தோஷ் சிவனிடம் பாராட்டி இருக்கிறார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவல் குறித்து வெளிப்படுத்தியுள்ளார் சந்தோஷ்சிவன்.