சமீபத்தில் சன் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் இரண்டு பெண் தொகுப்பாளினிகள் காமெடி என்கிற பெயரில் நடிகர் சூர்யாவை தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளது திரையுலகினரிடமும் ரசிகர்களிடமும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் கொதித்துப்போன சூர்யாவின் ரசிகர்கள் சன் டிவி முன்பாக சென்று சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும் என கோஷத்துடன் போராட்டத்துக்கு ஆயுத்தமானார்கள். ஆனால் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் ஊக்குவிக்காத சூர்யா, தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்து அவர்களது செயலை கைவிட செய்தார்.
“தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் சமூகம் பயன் பெற பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள்” என அவர் கூறினார்.
ஏற்கனவே ஆண்டாள் விவகாரத்தில் சினிமாக்காரராகிய வைரமுத்து பேசியதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என பலரும் கூறி வருகிறார்கள். இந்தநிலையில் தன் மீது யாரோ சில விமர்சனங்களை கூறியதால், அதனை முன்னிட்டு அவர்களுக்கு எதிராக தனது போராட்டம் நடத்தினால், அதையே சூர்யாவுக்கு ஒரு நியாயமா என எதிர்ப்பாளர்கள் திருப்பி விடுவார்கள் என்பதால் தான் சூர்யா தனது ரசிகர்களை அமைதியக்கினார் என கூறப்படுகிறது.