நேற்று கோவையில் நடைபெற்ற ‘சி-3’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சூர்யா, ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தனது கருத்துக்களை கூறினார்.. அதை தொடர்ந்து இன்று திருச்சூரில் நடந்த ரசிகர்கள் விழாவிலும் திருவனந்தபுரத்தில் நடக்கும் ‘சி-3’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்ச்சிகளிலும் கலந்துகொள்வதற்காக கேரளா செல்ல காரில் ஏர்போர்ட் கிளம்பினார்..
அந்த இரவு நேரத்தில் ஹைவே ரோட்டில் சூர்யாவின் காரை அடையாளம் கண்டுகொண்ட இரு ரசிகர்கள், விடாமல் அவரது காரை பின் தொடர்ந்தனர்.. தனது காருக்கு அருகிலேயே இரண்டு வாலிபர்கள் பைக்கில் ரொம்ப நேரமாக பாலோ செய்வதை கண்டு காரின் வேகத்தை குறைக்க சொன்னார் சூர்யா.
கார் கண்ணாடியை இறக்கிவிட்டதுமே அந்த ரசிகர்கள் சார் நாங்கள் உங்களுடைய தீவிர ரசிகர்கள் என புராணம் பாட ஆரம்பிக்க, சூர்யா அவர்களை கண்டிக்கும் விதமாக இதுபோல வேகமாக வண்டி ஓட்டுவது தவறு என கூறி அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்..