விநியோகஸ்தர்களை சமாளிக்க சூர்யா செய்த காரியம்..!


சில படங்கள் லாபம் சம்பாதித்து கொடுத்தவையா இல்லையா என்பது வெளியில் இருந்து பார்க்கும் மற்றவர்களுக்கு தெரியாது. அது தயாரிப்பளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மட்டுமே தெரிந்த விஷயமாக இருக்கும். வெளியில் பார்ப்பவர்களுக்கு 5௦வது நாள், 1௦௦ நாள் போஸ்டர்கள் ஒட்டப்படுவதை பார்க்கும்போது படம் கொழுத்த லாபம் சம்பாதித்திருக்கும் என்றே நினைப்பார்கள்.

2018ம் ஆண்டில் இதுவரை வெளிவந்த ஒரு படம் கூட அனைவருக்கும் லாபகரமான படமாக அமையவில்லை என்றே சொல்லப்படுகிறது. ஆனால், சிலர் அவர்களுடைய படங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக தினமும் விளம்பரப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடித்து பொங்கலுக்கு வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் ஹிட் எனவும், தோல்வி எனவும் இரண்டு விதமாக சொல்லப்பட்டது.

இதனிடையே, இப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனுக்கு தற்போது சூர்யா கார் ஒன்றை பரிசளித்திருப்பது விநியோகஸ்தர்கள் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். காரணம் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் இந்தப்படம் 15 கோடி ரூபாய் நஷ்டம் என அறிவித்துள்ளதுடன், சூர்யாவை சந்தித்து நஷ்ட ஈடு கேட்கலாம் என்று இருந்தார்களாம்.

இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, சூர்யா கார் பரிசளித்திருப்பதை பார்க்கும்போது, படம் லாபகரமாக ஓடியதால் தானே சூர்யா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்துள்ளார். ஓடாத படத்துக்கு யாராவது பரிசளிப்பார்களா என்றெல்லாம் பேச்சுக்கள் ஏழு துவங்கின.

இது வினியோகஸ்தர்களை கோபம் கொள்ள வைத்துள்ளது. படம் நஷ்டம் என்று தெரிந்தும் சூர்யா, அவருடைய தோல்வியை மறைக்க, இமேஜை காப்பாற்ற இப்படி நடந்து கொள்கிறார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.