சூர்யாவின் முடிவால் விஜய்க்குத்தான் லாபம்..!


விஜய் நடித்த ‘பைரவா’ படம் எதிரபார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்லப்பட்டது. குறிப்பாக ‘தெறி’ படம் அளவுக்கு கோட்ட வரவில்லை, வழக்கமான ஒரு மசாலாவாக வந்துள்ளது என்றும் பலர் கூறினார்கள்.. ஆனால் படக்குழுவினர் தரப்பிலோ நூறு கோடி ரூபாய் வசூலை தாண்டி விட்டது என அறிவித்தார்கள்..

இருந்தாலும் வழக்காமாக விஜய் படத்தின் ஓட்டத்தை இந்தமுறை ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் தடை செய்தது. இதனால் விஜய்க்கே இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இந்தப்போராட்டத்தின் காரணமாகவே சூர்யா தனது ‘சி-3’ படத்தின் ரிலீஸை பிப்-9க்கு மாற்றிவைத்தார். அனால் அது ஒருவகையில் விஜய்க்கு சாதகமாகவே அமைந்துவிட்டது.

தற்போது தமிழகத்தில் இயல்பு நிலை மெல்லத் திரும்பத் துவங்கியது. குடியரசு தினமான இன்று விடுமுறை நாள் என்பதால்,தமிழகம் முழுவதும் பைரவா திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு நல்ல வசூலை குவித்துள்ளது. குறிப்பாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் ஹவுஸ் புல் ஆகியுள்ளன. இதனால் உற்சாகத்தில் இருக்கிறது விஜய் தரப்பு..