விஜய்சேதுபதி தயாரிப்பில் லெனின் பார்தி டைரக்சனில் உருவான மேற்கு தொடர்ச்சி மலை படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டை பெற்றிருந்தாலும் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை, இந்தப்படம் எடுக்கப்பட்ட கதைக்களமாக தேனி மாவட்டத்தில் கூட ஒரே ஒரு தியேட்டர்தான் கிடைத்துள்ளது. விஜய்சேதுபதி என்கிற பிரபல ஹீரோ தயாரித்திருந்தும் இந்தப்படத்திற்கு ஏன் இந்தநிலை என பத்திரிகையாளர்கள் விஜய்சேதுபதியிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி, “எந்தப்படம் தியேட்டருக்கு வரவேண்டும், அதற்கு எத்தனை தியேட்டர்கள் ஒதுக்கவேண்டும் என்பதெல்லாம் இங்கே நாம் முடிவு செய்ய முடியாது.. விநியோகஸ்தர்களுக்கு எது நல்ல பட என தோன்றுகிறதோ, எது வசூலை அள்ளித்தரும் என தோன்றுகிறதோ அந்தப்படத்தை மக்கள் பார்த்தால் போதும் என தீர்மானிக்கிறார்கள். சினிமாவில் தற்போதைய சிஸ்டம் இப்படித்தான் இருக்கிறது. இதில் நான் எதுவுமே செய்ய முடியாது. யார் இந்த சிஸ்டத்தை மாற்றுவார்கள் என்றும் தெரியாது” என வேதனையுடன் கூறினார்..
விஜய்சேதுபதி தயாரித்த படத்துக்கே இந்த நிலையா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்