தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் நடக்கவுள்ள நிலையில், டி.சிவா, தாணுவை எதிர்த்து விஷால் மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோர் நிற்கின்றனர். இந்நிலையில், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சில தினங்களுக்கு முன்பு சிவாவைப் பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார்.
இதற்கு அடுத்த நாளே தயாரிப்பாளர் தாணு பதிலடி கொடுத்தார். தற்போது சிவா பேசுகையில், ஒரு சில வருடங்களுக்கு முன்பு கார்த்தி மற்றும் சூர்யாவால் தனக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று ஞானவேல் ராஜா என்னிடம் கூறியிருந்தார். மேலும், நீங்கள் தான் கால்ஷீட் வாங்கி தரவேண்டும் என்று கூறியுள்ளதாக சிவா தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமில்லாமல், சிவகார்த்திகேயனிடமும் கால்ஷீட் வாங்கி தாருங்கள் என்று புலம்பியவர் தற்போது எங்களைப் பற்றி பேசுவது எந்த விதத்தில் நியாயம். எங்களை பற்றி பேசுவதோடு சூர்யா குடும்பத்தின் பெயரையே கெடுத்துவிட்டார் என்று தெரிவித்துள்ளார். ஆக இந்த தேர்தலை சாக்காக வைத்து சூர்யா கார்த்தி ஆகியோருடன் ஞானவேல்ராஜாவை சிண்டுமுடிந்து சிகளில் இழுத்துவிட பார்க்கிறார் டி.சிவா என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.