டாப்ஸியின் இடுப்பு; ரசிகர்கள் கடுப்பு

taapsee_condition_fans_distraction
அந்த காலத்துல எந்த ஒரு நல்ல செய்தியோ, துக்க செய்தியோ அதை உறவினர்களுக்கு தெரியபடுத்த வண்டியை கட்டிட்டு ஊர் ஊராக சுற்றி சொல்லிக் கொண்டிருப்பார்கள், அதன்பிறகு அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி கடிதம் என்ற பேப்பரில் செய்தியை எழுதி அனுப்பி வைத்தனர். அதன்பிறகு தொலைபேசி என்ற ஒன்று உலகம் முழுவதும் சென்றடைந்தது, தற்போது இண்டர்நெட் என்ற ஒன்று உலகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு சாதாராண ரசிகன் தற்போது நட்சத்திரங்களிடையே உரையாடுவது, புகைப்படம் எடுத்துக் கொள்வது என அனைத்தும் சாதாராணமாக மாறிவிட்டது. இப்ப இதுக்கு என்னன்னு சொல்ல வர்றிங்களா அங்கதான் மேட்டரே இருக்கு…

ரசிகர்களின் அளவு கடந்த அன்பில் சிக்கி அடிக்கடி நடிகைகள் மூச்சுத்திணறுவது உண்டு. தனக்கு பிடித்த அல்லது நடிகைகள் யாராக இருந்தாலும் அவர்களுடன் ஒரு போட்டோவை எடுத்து அதை ஃபேஸ்புக்கில் போட்டு அதிக லைக் வாங்கி காலரை தூக்கிவிட்டு சுற்றும் இளைஞர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள். ரசிகர் ஒருவர் ஒரு நட்சத்திரத்திடம் போட்டோ எடுக்க வேண்டும் என்று கேட்டால், அதற்கு நட்சத்திரங்கள் சரி என்று கூறிவிடுவார்கள். ஆனால் நடிகை டாப்ஸி இந்த ஓகேவுக்கு ஸ்பீட் பிரேக்கர் போட்டிருக்கிறார்… என்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால் அனுமதி வாங்கியிருக்க வேண்டும், அப்படியே அனுமதி வாங்கியிருந்தாலும், தோளிலும், இடுப்பிலும் கை போடக் கூடாது என்று கூறிவிட்டாராம். இந்த பொண்ணு இப்படி சொல்றதை பார்த்தால் எங்கேயோ எதோ நடந்திருக்குபோல…