மலையாள சினிமாவில் வசூல் நாயகனாக இருக்கும் இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி.. இவர் ஏற்கனவே ‘நேரம்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருப்பவர் தான். தற்போது கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்தப்படத்தில் ‘சதுரங்க வேட்டை’ ஹீரோ ‘நட்டி’ நட்ராஜ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கள்ளப்படம்’ லட்சுமி பிரியா நடிக்கிறார். இந்தப்படத்தில் ஒரு நடிகராக நடித்தாலும், ஒரு சமயம் சில காட்சிகளை படமாக்குவதற்காக கேமராமேனாகவும் மாறி யூனிட்டையே வியப்பில் ஆழ்த்தினாராம் நட்டி..
திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி பின்னணியில் உருவாகும் இந்தப்படத்திற்கு இன்னும் பெயர்வைக்கப்படவில்லை. பழைய ஹிட் படத்தின் டைட்டில் ஒன்றை வைக்க முடிவு செய்துள்ளார்களாம்.. இந்த டைட்டிலை பெறுவதற்காக சம்பந்தப்பட்ட தமிழ் தயாரிப்பு நிறுவனத்துடன் நட்டியே பேச்சுவாரத்தையில் இறங்கியுள்ளாராம்..