ராய் லட்சுமி இருக்கிறாரே அவரை முப்பரிமான நடிகை என தாராளமாக சொல்லலாம்.. தென்ன முப்பரிமாணம் என்கிறீர்களா..? தமிழில் மீடியம் கிளாமர், ஓரளவு நடிப்பு என இருப்பவர் மலையாள படங்களில் நடிக்கும்போது கிளாமருக்கு குட்பை சொல்லிவிட்டு நடிப்பரசியாக மாறிவிடுவார்.. அந்த படங்களில் எல்லாம் குடும்ப குத்துவிளக்காக ஜொலிப்பார்.
இப்பொது முதன்முதலாக பாலிவுட்டிலும் ‘ஜூலி-2’ என்கிற படம் மூலமாக அடியெடுத்து வைத்துள்ளார். பாலிவுட்டில் கவர்ச்சிதான் எடுபடும் என்பதை நன்றாக புரிந்து வைந்திருக்கும் ராய் லட்சுமி, அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே கவர்ச்சியை அள்ளி தெளித்திருக்கிறார். படக்குழுவினர் மொத்தம் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஒரு புகைப்படத்தில் கடற்கரை மணலில் ஆடை இல்லாமல் வெறும் புத்தகத்தை மறைத்தபடி படுத்துள்ளார் ராய் லட்சுமி. மற்றொன்றில் மெல்லிய மேல் ஆடையை கழற்றியபடி பின்புறமாக நின்று போஸ் கொடுத்து பாலிவுட் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார்
ம்ம்ம்.. ராய்லட்சுமிக்கு தமிழ்சினிமா என்பது வரவேற்பறை மாதிரி.. ஓரளவுக்கு மேல் கிளாமராக நடமாட முடியாதே.. ஆனால் இந்தி சினிமா பெட்ரூம் மாதிரி.. இஷ்டத்துக்கு கவர்ச்சியில் புகுந்து விளையாடலாமே..!