தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை வைத்து கடந்த 2௦ நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இதற்கு ஆதரவாக நிற்கவேண்டிய தியேட்டர் உரிமையாளர்களோ தங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல வேறு மொழி படங்களை திரையிட்டு வந்தனர்.
பின்னர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, நாலைந்து நமுத்து போன கோரிக்கைகளை முன்வைத்து தியேட்டர்களும் ஓடாது என வேலைநிறுத்தத்தில் குதித்தனர். ஆனால் இது தயாரிப்பாளர்களுக்கு ஆதரவான வேலை நிறுத்தம் அல்ல என்பது மட்டும் உண்மை.
இப்போது திடீரென் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. தமிழக அமைச்சர்களுடன் பேசிவிட்டு, அரசு தங்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதாக கூறியுள்ளது என சப்பை காரணம் கோரி ஸ்ட்ரைக்கை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.