டாப்சியின் பந்தா..! ஐஸ்வர்யாவின் எளிமை…!

காஞ்சனா-2 படம் நன்றாக ஓடுகிறது தான்.. இல்லையென்று சொல்லவில்லை.. ஆனால் அந்த வெற்றி ஒன்றும் டாப்சியினால் மட்டுமே வந்தது இல்லையே..? அந்த வெற்றிக்கு பலர் காரணமாக இருக்கின்றனர். ஆனால் காஞ்சனா-2 படமே ஏதோ தன்னால் தான் ஓடுவதுபோல, அப்படி ஒரு அலட்டல் தெரிந்தது ‘வை ராஜா வை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த டாப்சியின் நடவடிக்கைகளில்.

டாப்சி வருவதற்கு முன்னரே ஹாலில் பார்வையாளர்கள் பகுதியில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் ஒன்றில் சாதாரணமாக அமர்ந்து படத்தின் காஸ்ட்யூம் டிசைனரான பூர்ணிமாவுடன் பேசிக்கொண்டிருந்தார் படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா தனுஷ். அதன்பின்னர் கொஞ்ச நேரம் கழித்து உள்ளே வந்தார் டாப்சி.

வந்தவர் நேராக ஐஸ்வர்யா பக்கம் போகாமல், மேடையின் அருகில் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த நாற்காலியில் பந்தாவாக அமர்ந்தார். அவர் வந்ததை பார்த்து பேசிக்கொண்டிருந்த ஐஸ்வர்யா எழுந்து டாப்சியின் அருகில் சென்று விசாரித்தார். சூப்பர்ஸ்டாரின் மகளாக இருந்தாலும் ஐஸ்வர்யா காட்டிய எளிமை ஆச்சர்யப்படுத்தியது. டாப்சி காட்டிய பந்தா தான் கொஞ்சம் முகம் சுழிக்க வைத்தது.