தனி ஒருவன்-2 ; பர்னிச்சர் மேல் கையை வைத்த மோகன்ராஜா


ஹிட்டாகாத சில படங்களுக்கு கூட இரண்டாம் பாகம் எடுக்கும்போது, ஹிட்டான படங்களின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு எழுவது வாடிக்கை தான். ஆனால் யதார்த்தம் என்னவென்றால் ஒரு சில படங்களுக்கே இரண்டாம் பாகங்கள் வெற்றி பெற்று மூன்றாம் பாகத்தையும் கூட எடுக்க வைத்தன. உதாரணத்திற்கு சிங்கம், முனி (காஞ்சனா) ஆகிய படங்களை சொல்லலாம்.

அந்தவகையில் தன்னுடைய சூப்பர்ஹிட்டான சாமி படத்தின் இரண்டாம் பாகத்தையே பல வருடங்கள் கழித்துதான் எடுத்து வருகிறார் இயக்குனர் ஹீரோ. இந்தப்பட்டியலில் தற்போது தனி ருவன் படமும் இரண்டாம் பாகத்திற்கு தயாராகிவிட்டது.

மோகன்ராஜா திறமையான இயக்குனர் தான் அதில் சந்தேகமில்லை.. இப்போது ரசிகர்களுக்கு சந்தேகம் என்னவென்றால் தனி ஒருவன் ஹிட் கொடுத்த மோகன்ராஜா அடுத்தது சிவகார்த்திகேயனை வைத்து வேலைக்காரன் என்கிற ஆவரேஜ் படத்தை தான் கொடுத்தார். அதேசமயம் அந்தப்படத்தை பற்றி ரிலீஸாவதற்கு முன் ஓவராக பில்டப்பும் கொடுத்துவிட்டது அந்தப்படத்தின் தோல்விக்கு ஒரு காரணம்.

அந்த தோல்வியில் இருந்து மீள புதிதாக ஒரு ஹீரோவை வைத்தது புதியதாக ஒரு படம் இயக்காமல், மீண்டும் தனது தம்பி ஜெயம் ரவியையே வைத்து, தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை துவங்கியிருக்கிறார். பர்னிச்சர் மேல கைய வச்சே என வடிவேலு சொன்னது போல முதல் பாகத்தின் பெயரை கவிழ்த்து விடுவாரோ என்கிற பயம் ரசிகர்களிடம் எழுந்துள்ளதையும் சோஷியல் மீடியாவில் பார்க்க முடிகிறது.