சரத்குமாரை சந்திக்கு இழுக்க நாள் குறித்த நடிகர்சங்கம்..!


மிதமாக சொல்லி பார்த்தார்கள்.. கடிதம் எழுதி பார்த்தார்கள். போலேசிலி புகார் கொடுக்கப்போவதாக சொல்லி பார்த்தார்கள்.. ம்ம்ஹூம்.. சரத்குமார் எதற்கும் மசிவதாக தெரிவதில்லை.. பூச்சி முருகன் மூலமாக போலீசாரிடம் புகாரே கொடுத்துவிட்டு வந்துவிட்டார்கள் நடிகர் சங்கத்தில் அவர் ஏகப்பட்ட ஊழல் செய்திருப்பதாக.

அடுத்தகட்ட நடவடிக்கையாக வரும் மார்ச்-20ஆம் தேதி நடிகர் சங்க கூட்டம் கூட இருக்கிறது. அதில் ரஜினி, முதல் கமல் வரை அனைவரையும் கலந்துகொள்ள சொல்லி அழைப்பு அனுப்பப்பட இருக்கிறது. கிட்டத்தட்ட 905 சதவீத நடிகர்சங்க உறுப்பினர்கள் கூடும் இந்த கூட்டத்தில் சரத்குமாரும் ராதாரவியும் சேர்ந்து செய்த ஊழல்களை அம்பலப்படுத்த இருக்கிறார்களாம்.

இதற்கு பதிலடி கொடுக்க சரத்குமார் தரப்பு தயாராக இருந்தாலும் கூட, இந்த ஊழல் கணக்கு ஆதாரங்களை பார்த்தால் அவரது ஆதரவாளர்களே அவரை தூக்கிப்போட்டுவிட்டு பாண்டவர் அணிப்பக்கம் வந்துவிடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் நிலைமை இப்படியிருக்க, சரத்குமாரோ, வழக்கம்போல என்மீது எந் கறையும் இல்லை.. வேண்டுமென்றே களங்கம் கற்பிக்கிறார்கள் என கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே, தன பங்கிற்கும் காவல்துறையினரிடம் ஒரு புகாரை கொடுத்துவிட்டு வந்துள்ளார்.