நானும் ரௌடி தான் இயக்குனர் விக்னேஷ் சிவனின் நிலை தற்போது பட்டுப்புடவையை கடன்கொடுத்துவிட்டு முக்கலையை தூக்கிக்கொண்டு அலைபவனின் மனநிலையில் தான் உள்ளதாம். இல்லையென்றால் தற்போது அவரது காதலியான நயன்தாரா நடித்துவரும் இருமுகன் ஷூட்டிங்ஸ்பாட்டுக்கே அவர் வரவேண்டிய காரணம் என்ன என கேள்வி எழுப்புகிறார்களாம் படக்குழுவினர்.
நானும் ரௌடி தான் படத்தை வெற்றிப்படமாக்கிய விக்னேஷ் சிவன் இன்னும் அடுத்த படத்தை இயக்கப்போகாததற்கு காரணமும் இதுதானாம். ஏற்கனவே விக்ரமுடன் நடிக்கமாட்டேன் என சொல்லிவந்த நயன்தாரா இதில் நடிக்க ஒப்புக்கொண்டதால் கிட்டத்தட்ட அவருக்கு பாடிகார்டு மாதிரி படப்பிடிப்புக்கு வந்து, மாலியில் நயந்தாராவுடனேயே கிளம்பி செல்கிறாராம் ரௌடி இயக்குனர்.