தமிழ் சினிமாவில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நம்ம ஊர் கலாச்சாரம், பண்பாடு தெரிந்து படம் எடுக்கவேண்டிய அவசியமெல்லாம் இப்போது தேவையில்லை.. சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைக்க என்ன பண்ணவேண்டும், வரிவிலக்கு கிடைக்க எப்படி டைட்டில் வைக்கவேண்டும் என்கிற விஷயம் மட்டும் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும்.. அது தெரிந்தோ தெரியாமலோ மாஸ்’ என டைட்டிலை வைத்துவிட்டு சூர்யாவும் வெங்கட் பிரபுவும் அதை மாசு என்கிற ‘மாசிலாமணியாக்கிய கதை தெரியும் தானே…
அப்பாடக்கர் படம் சகலகலா வல்லவன் ஆனதும் தான் நடந்ததே.. அப்படி இருக்கையில் கடந்த இரண்டு வருடங்களாக தனது மகன் பிரசாந்த் நடித்து வரும் படத்திற்கு எப்படி ‘சாஹசம்’ என அவரது தந்தை தியாகராஜன் ஒப்புக்கொண்டார் என தெரியவில்லை.. ஆனால் வரும் 5 ஆம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில்தான், படத்தை சென்சாருக்கு அனுப்புவதற்கு முன் ‘ஹ’வை தூக்கிவிட்டு ‘க’ போட்டு சாகசம்’ என மாற்றியிருக்கிறார் தியாகராஜன்.