பிரதமர் மோடி, செல்லாத நோட்டு நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்பே சூர்யாவின் படம் டிச-16ஆம் தேதி என அறிவித்தார்கள்… ஆனால் அதன்பின்னர் கருப்பு பண நடவடிக்கை காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது.. அதனால் டிச-23ஆம் தேதிக்கு மாற்றினார்கள். இந்தநிலையில் தான் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த சோகம் தமிழகத்தை தாக்கியது..
இருந்தாலும் டிச-23ஆம் தேதி ரிலீஸ் செய்வதில் பிரச்சனை வராது என்றே நினைத்தார்கள். ஆனால் அதற்குள் வார்தா புயல் சென்னையை புரட்டிப்போட்டது.. அதனால் சூர்யாவின் ‘S3’ பட ரிலீஸ் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.. ஆனால் இந்தமுறை ஜன-26ஆம் தேதி படம் வெளியாவதை உறுதி செய்துள்ளார்கள்..
ஆனால் இந்தப்படம் தாமதவதவற்கு மேலே சொன்னவை எதுவும் காரணமில்லையாம். படத்தில் அதிரடி வன்முறை காட்சிகள் இடம்பெற்று இருப்பதாக கூறி சென்சாரில் யு/ஏ சான்றிதழ் தான் கொடுத்தார்களாம். இதனை மாற்றுவதற்காக ரிவைசிங் கமிட்டியை அணுக, அங்கே பொறுப்பில் உள்ள முக்கியமான நபர் வேண்டுமென்றே காலத்தை கடத்தி வருகிறாராம்.
சரி எது கிடைத்தாலும் கிடைக்கட்டும் என்று ஒரே மனதாக ஜன-26ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவுசெய்து விட்டார்கள்.