கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இதனால், நாள் ஒன்றுக்கு சுமார் 20 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரியை நாங்கள் எதிர்க்கவிலை, மாநில அரசின் கேளிக்கை வரியைத்தான் எதிர்க்கிறோம்,” என்று சொல்லித்தான் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.
கேளிக்கை வரி விதிப்பை எதிர்க்கும் போர்வையில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த கோரிக்கை வைத்து வருவதாக சொலப்படுகிறது. கடந்த 10 வருடங்களாக தியேட்டர் கட்டணங்களை சீரமைக்கப்படாமல் இருப்பதால், இந்த சந்தர்ப்பத்தில் அதையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று திரையுரகினர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாம். அதனால்தான் பேச்சு வார்த்தையில் இழுபறி நீடித்து வருவதாகவும் சொல்கிறார்கள்
கேளிக்கை வரி விதித்தால் 120 ரூபாய் டிக்கெட் கட்டணங்கள் 200 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளது. அதே சமயம், டிக்கெட் கட்டணங்களை கேளிக்கை வரி இல்லாமல் 200 ரூபாய் வரை உயர்த்தலாம் என அரசாங்கத்திடம் முறையிட்டுள்ளார்களாம். தியேட்டர் டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்தால் மக்கள் தியேட்டருக்கு வருவது மேலும் குறையும் என்பதை உணராமல் இப்படி ஒரு கோரிக்கையை வைப்பதில் என்ன லாஜிக் இருக்கிறது..?