கதாநாயகியுடன் ஆபரில் துணை நாயகியையும் ஓட்டிவந்த இயக்குனர்..!


‘தீதும் நன்றும்’ என அழகு தமிழ் டைட்டிலுடன் இயக்குனராக அறிமுகமாகிறார் ராசு ரஞ்சித். இவர் நாளைய இயக்குனர் குறும்பட போட்டியில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் மலையாள நடிகை கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்..

இவர் ‘8 தோட்டாக்கள்’ வெற்றிப்படம் மூலமாக ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் மூன்று நண்பர்களில் ஒருவரின் மனைவியாக படத்தின் மைய கதாபாத்திரமாக நடித்துள்ளார்.

இன்னொரு முக்கிய வேடத்தில் கேரளாவை சேர்ந்த லிஜோமோல் ஜோஸ் என்பவர் நடித்துள்ளார். அபர்ணாவை ஒப்பந்தம் செய்வதற்காக மலையாளத்தில் அவர் நடித்த படத்தை பார்த்தபோது அதில் இன்னொரு கேரக்டரில் நடித்திருந்த லிஜோமோலின் நடிப்பு பிடித்துப்போக, படத்தில் இருந்து துணிய நாயகி கேரக்டருக்காக அவரையும் அழைத்துக்கொண்டு வந்துவிட்டாராம் இயக்குனர் ராசு ரஞ்சித்.