சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற படம் ‘பழைய வண்ணாரப்பேட்டை’. படத்தைப் பார்த்தவர்கள் அதில் ஒரு முழுமையான நாயகனாக உருவெடுத்துள்ள நடிகர் பிரஜினைப் பாராட்டத் தவற வில்லை. இதற்கான இவரது உழைப்பை தெரிந்துகொண்டால் நீங்கள் மலைத்து போய்விடுவீர்கள்..
ஆம்.. 5 ஆண்டுகள் விட்டுவிட்டு இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும் 48 நாட்களில் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட படம். அது 24 மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதால் ஒரே தோற்றம், ஒரே உடைதான் வர வேண்டும். அதனால் என் எடை 73 கிலோவை 16 ஆண்டுகளாகப் பராமரித்து வந்துள்ளார் பிரஜின். தாடியுடன் இருந்ததால், வேறு படங்களிலும் நடிக்க முடியாது. இப்படி பல சிரமங்களை எதிர் கொண்டு இந்தப்படத்தில் நடித்து முடித்தாராம்.
ஆனால் சின்னத்திரை நடிகர் என்பதாலேயே சினிமாவில் இவருக்கு வாய்ப்பு தர மறுக்கிறார்களாம். காரணம் இவரை ஹீரோவாக்கினால் படத்திற்கு சீரியல் போன்ற தூரம் வந்துவிடுமாம். ஆனாலும் அதை தாண்டியும் ஒரு சில இயக்குனர்கள் நம்பிக்கை வைத்து வாய்ப்பு தந்து வருகிறார்களாம்.