‘சாமி-2’வில் கீர்த்தி சுரேஷுக்கு வேலை இதுதான்..!


‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கப்போகிறேன் என்று இயக்குனர் ஹரி அறிவித்த நாளில் இருந்தே அனைவரையும் எதிர்நோக்க வைத்த கேள்வி ‘சாமி-2’வில் மாமியாக, அதாங்க விக்ரமின் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பதுதான்..

பலர் வெவ்வேறு நடிகைகளின் பெயர்களை சொன்னாலும் வெகு சிலரே த்ரிஷாவே ஒருவேளை இதிலும் நடிக்கக்கூடும் என நம்பினார்கள்.. படம் வெளியாகி சுமார் பதினான்கு ஆண்டுகள் ஆன பின்னரும் அதே ஜோடி தொடருமா என்பதுதான் அவர்கள் சந்தேகத்திற்கு காரணம்..

ஆனால் த்ரிஷா நடிப்பதும் உறுதி செய்யப்பட்டு, இன்னொரு கதாநாயகியாக இப்போது கீர்த்தி சுரேஷும் இதில் இணைந்துள்ளார். அப்படிஎன்றால் யாருக்கு முக்கியத்துவம் என்கிற கேள்வி எழுவது சகஜம் தானே..?

ஹரியின் சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹன்ஷிகாவும், மூன்றாம் பாகத்தில் ஸ்ருதிஹாசனும் இரண்டாவது நாயகியராக நடித்தார்களே.. அதே கணக்கில் தான் கீர்த்தி சுரேஷும் நடிக்கிறார் என்கிறார்கள். அதாவது மெயின் ஹீரோயினாக, விக்ரமின் மனைவியாக த்ரிஷா தொடர்ந்தாலும், கீர்த்தியை விக்ரமுக்கு ஜோடியாக்காவிட்டாலும் கூட, அதிக நேரம் வரும் காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் தன நடிப்பார் என சொல்லப்படுகிறது.