பாதியிலேயே ஓடுவது ஸ்ருதிஹாசனுக்கு புதுசா என்ன..?


‘சங்கமித்ரா’ படத்தில் இருந்து தான் விலகுவதாக ஸ்ருதிஹாசன் அறிவித்தது தான் இப்போதைய ஹாட் டாபிக் ஆக ஓடிக்கொண்டு இருக்கிறது. பாகுபலி போல பிரமாண்டமான படமாக தான் இயக்கும் சங்கமித்ரா’வை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதற்காக ஒப்ந்தமாகினர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்தப்படத்தை பற்றிய அறிவிப்பு, பர்ஸ்ட்லுக் ஆகியவை சிவப்பு கம்பள வரவேற்புடன் வெளியிடப்பட்டன. இந்த விழாவில் கூட புதிய வகையிலான ஆடையுடன் ஸ்ருதிஹாசன் பங்கேற்று விழாக்குழுவினர் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.. படக்குழுவினருடன் சேர்ந்து ஒய்யாரமாக போஸ் எல்லாம் கொடுத்துவிட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், இந்தப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளார்

இவ்வளவு பிரமாண்டமான வரலாற்று படத்தில் ஸ்ருதிஹாசனை எப்படி ஒப்பந்தம் செய்தார்கள் என்று வேண்டுமானால் ஆச்சர்யப்படலாமே தவிர, ஸ்ருதிஹாசனின் கேரக்டரை பற்றி தெரிந்தவர்களுக்கு அவர் விலகியதில் பெரிய ஆச்சர்யம் ஏதும் இருக்கப்போவதில்லை.

இரண்டு வருடங்களுக்கு முன் கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு படப்பிடிப்பும் துவங்கிய நேரத்தில், சொல்லாமல் கொள்ளாமல் அதிலிருந்து விலகி, அஜித்தின் ‘காவிய’ படமாக உருவான ‘வேதாளம்’ படத்தில் போய் இணைந்துகொண்டவர் தான் ஸ்ருதிஹாசன்.. இத்தனைக்கும் அது பிவிபி என்கிற பெரிய நிறுவனத்தின் படம்.. சம்பளத்திற்கும் எந்த குறையும் இருந்திருக்காதுதான்… ஆனாலும் தன்னிச்சையாக அந்த முடிவை எடுத்தார் ஸ்ருதிஹாசன். கமல் மகள் என்பதால் பிரச்சனை பெரிதாகாமல் அப்படியே அமுக்கப்பட்டு விட்டது. அதன்பின் அவருக்கு பதிலாகத்தான் தமன்னா ஒப்ந்தமானர்.. படமும் ஹிட்டானது வரலாறு..

இது பற்றி சங்கமித்ரா யூனிட்டாரில் ஒருவரிடம் பேச்சு கொடுத்தபோது, ‘தோழா’ படத்தில் தமன்னாவின் கேரக்டரையும், ‘வேதாளம்’ படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரிக்கு இணையாக உருவாக்கப்பட்டிருந்த ஸ்ருதிஹாசனின் கதாபாத்திரத்தையும் பார்த்தாலே தெரியும், அவர் முட்டாள்தனமான முடிவுகளையே அடிக்கடி எடுக்கிறார் என்பதும். எவ்வளவு பெரிய பச்சோந்தியாக இருக்கிறார் என்பதும்.. மனசாட்சி இல்லாமல் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்தவர்தானே அவர்.. அவரிடம் எப்படி நியாய தர்மங்களை எதிர்பார்க்க முடியும்” என்கிறார்கள் வெறுப்புடன்.

இன்னும் சிலரோ, சங்கமித்ரா படத்திற்கு ஏற்பட்டிருந்த திருஷ்டி கழிந்துவிட்டது. இனி படம் சுறுசுறுப்பாக வளரும் பாருங்களேன் என்கிறார்கள்..