இயக்குனர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இயக்கியுள்ள படம் ‘தொட்ரா ‘. பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளா இந்தப்படத்தில்,இயக்குனர் ஏ.வெங்கடேஷ், எம்.எஸ்.குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், கூல் சுரேஷ், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். உத்தமராஜா என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
வரும் ஜூலை-13ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளது. இந்தநிலையில் இந்தப்படம் குறித்து அதிர்சசியான தகவல் ஒன்றை கூறுகிறார் இயக்குனர் மதுராஜ்..
“இந்த படத்தில் காதல் கட்டப் பஞ்சாயத்துகள் அதன் தீவிரத்தால் பாதிக்கப்படும் காதலர்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளோம். எங்க ஊரில் இந்த வேலையை செய்பவர்களுடன் கூடவே பல நாட்கள் தங்கியிருந்து நேரில் பார்த்த சம்பவங்களை இதில் பதிவு செய்துள்ளேன். ஒரு பையனை நெடுஞ்சாலையில் பாரிகார்டில் கட்டிப்போட்டிருந்தனர். சில பல பேச்சுவார்த்தைகள்.. பணப்பேரம் நடந்த பின், அந்த பையனை பெண்ணிடமிருந்து பிரித்து பெங்களூருக்கு மிரட்டி அனுப்பி வைத்தனர்..
அந்த ஒரிஜினல் தாதாக்களை என் படத்தில் அவர்களாகவே நடிக்க வைத்துள்ளேன். அவர்களுக்கு தாங்கள் நடிக்கிறோம் என்பது மட்டும்தான் தெரியும்.. தாங்கள் நிஜத்தில் செய்யும் வேலையைத்தான் படத்திலும் செய்கிறோம் என்பது படம் வெளியானால்தான் அவர்களுக்கே தெரியும். படம் வெளியான பின் அவர்களுக்கு ஓடி ஒளிய வேண்டுமா? இல்லை மன்னிப்பார்களா? தெரியாது” என்கிறார் மதுராஜ்..