ஏற்கனவே அவிங்களுக்கும் இவிங்களுக்கும் வாய்க்கா தகராறு.. வயலுக்கு சொந்தக்காரங்களான விஜய்யும் அஜித்தும் ஒன்னுக்கொன்னா பழகுனா கூட, வயல்ல வேலைபார்க்கிற ரசிகருங்க இந்த வரப்புத்தகராறை விடுற மாதிரி இல்ல. அதுவே அப்பப்ப லேசுபாசா பேஸ்புக், இன்டர்நெட்டுன்னு புகைஞ்சுட்டு தான் இருக்கு..
இப்போ அதுல கொஞ்சம் பெட்ரோல ஊத்தின மாதிரில ஆயிருச்சு ‘ஒஉளி’ பட ஆடியோ ரிலீஸ்ல பேசுன சகலகலாவல்லவரான தாடிக்காரரோட பேச்சு.. சிம்புவோட ‘வாலு’ ரிலீசாகறதுக்கு விஜய் உதவுனாரு தான்.. அதுக்கு தனிப்பட்ட முறைல நன்றி சொல்லிருந்தா போதுமே.. பொதுமேடைல விஜய்யை புகழ்ந்து கால்மணி நேரம் உணர்ச்சி பொங்க அடுக்கு மொழில பேசுனா, அஜித் ரசிகருஞா காண்டாவானுங்களா இல்லையா..?
ஏற்கனவே இவர் பையன், தான் பேசுற மேடைல எல்லாம் நான் ‘தல பேன்’னு சொல்லி வச்சுருக்காரு.. சிம்புவோட படத்துக்கு வர்றதுல பாதி ஆளுங்க ‘தல’ ரசிகர்கள் தான். அப்படியிருக்க விஜய் சிம்புவுக்கு உதவி பண்ணினார்னா அது அவரோட பெருந்தன்மை.. அதை டி.ஆர் பப்ளிக்கா பேசி உடைச்சதுதான் ஏற்கனவே எரியுற நெருப்புல இப்ப திரும்பவும் எண்ணெயை ஊத்துன மாதிரில்ல ஆயிருச்சு.
இப்ப விஜய்க்கு எதிரா போஸ்டர் ஓட்டுறவன, சிம்புவுக்கும் சேர்த்துல ஒரு போஸ்டர ரெடி பண்ண வச்சிட்டாரு நம்ம டி.ஆரு என நெட்டை திறந்தாலே சிம்புவின் ரசிகர்கள் புலம்பவதை பார்க்க முடிகிறது. சீக்கிரமா எதுனா பண்ணி அஜித் ரசிகருங்களை கூல் பண்ணுங்க சார்..
பின் குறிப்பு : தனது மகன் படத்தை ரிலீஸாக விடாமல் இன்னொருத்தர் வழக்கு தொடர்ந்து தடை பண்ணுகிறாரே என கொதிக்கும் இதே டி.ஆர், ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை உப்புப்பெறாத ஒரு டண்டணக்கா பாடலுக்காக ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு ரிலீஸ் பன்னவிடாமல் அடாவடி பண்ணிய போது நினைத்துப்பார்த்தாரா..? தனக்கு வந்தால் ரத்தம்.. அடுத்தவனுக்கு என்றால் தக்காளிச்சட்டினியா.? அந்த தயாரிப்பாளரின் சாபம் தான் இப்படி டி.ஆருக்கு எதிராக திரும்பியிருகிறது என்றும் சிலர் பேசிக்கொள்கிறார்கள்.