திரையுலகிற்கு வந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்துதான் த்ரிஷாவால் தனுஷுடன் ஜோடி சேர முடிந்திருக்கிறது.. இல்லையில்லை தனுஷால் த்ரிஷாவுடன் ஜோடி சேர முடிந்திருக்கிறது.. சரி.. எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்… துரை செந்தில்குமார் இயக்கத்தில் ‘கொடி’ படத்தில் டபுள் ஆக்சனில் நடிக்கும் இரண்டு தனுஷ்களில் ஒருவருக்கு ஜோடி த்ரிஷா தான்..
இந்த கேரக்டரை த்ரிஷா விரும்பி கேட்டு வாங்கி நடிக்கிறாராம். காரணம் தனுஷுக்கு ஜோடி என்றாலும் கூட இது நெகடிவ் கதாபாத்திரமாம். கிட்டத்தட்ட படையப்பா நீலாம்பரி டைப்பிலான இந்த கேரக்டரில் புதுவிதமான த்ரிஷா வெளிப்படுவார் என்கிறார்களாம் படக்குழுவினர். படம் முழுவதும் தனுஷை எதிர்ப்பதுதான் த்ரிஷாவின் தலையாய பணியாம்.