கர்நாடகா, தமிழ் நாடு என மாறி மாறி லிங்கா படத்தின் ஷூட்டிங்கை எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இந்நிலையில் நேற்று திடீரென ஒரு வதந்தி பரவியது அதாவது த்ரிஷா லிங்கா படத்தில் நடிக்கிறார் அப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக் கொண்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. இதை கேள்விப்பட்ட த்ரிஷா உடனே இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். எனக்கு ரஜினி சாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் லிங்கா படத்தின் சம்பந்தமாக இதுவரை என்னை யாரும் அனுகவில்லை. யாரோ பொய்யான செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள். லிங்கா படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ந் தேதி திரைக்கு கொண்டு வர 24 மணி நேரமும் படத்தின் ஷூட்டிங்கை விடாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
த்ரிஷா தமிழ், தெலுங்கு சினிமாவில் கிட்டத்தட்ட அனைத்து நட்சத்திரங்களுடன் நடித்துவிட்டார். இன்னும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பை மட்டுமே எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பதாக அவரே கூறும்போது லிங்காவில் கமிட்டானா ட்விட்டரில் சொல்ல மட்டாரா என்ன?…