த்ரிஷா திரையுலகிற்குள் நுழைந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஓடிவிட்டன. இன்றும் கதாநாயகியாகவே அவர் நிலைத்து நிற்பதும் அன்று பார்த்த அதே இளமையான தோற்றத்துடன் இருப்பதும் த்ரிஷா வாங்கி வந்த வரம்.. கடந்த சில வருடங்களாகவே த்ரிஷாவின் திருமணம் எப்போது என்கிற கேள்வியும் அவர் யாரை திருமணம் செய்யப்போகிறார் என்ற கேள்வியும் அவ்வப்போது எழுந்துகொண்டுதான் இருந்தன.
அதுகுறித்து பல வதந்திகள் அந்தந்த சமயங்களில் உலாவந்தாலும் இதில் கடைசியாக தயாரிப்பாளர் வருண்மணியனை அவர் திருமணம் செய்யப்போவதாக சொல்லப்பட்டது. இந்த செய்திக்கு அந்த நேரத்தில் வழக்கம்போல த்ரிஷாவும் மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் பல இடங்களுக்கு அவர்கள் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பல்வேறு யூகங்களை கிளப்பின.
கடைசியில் பூனைக்குட்டி வெளியேவந்துவிட்டது கதையாக தனது இவர்களது நிச்சயதார்த்தம் ஜனவரி-23லஆம் தேதி நடந்தது.இதுவரை கரெக்ட்டாகத்தான் போய்கொண்டிருந்தது. ஆனால் திருமணம் எப்போது என்கிற தேதி குறித்து பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என த்ரிஷா சொன்னார் பாருங்கள்.. அங்கே தான் வைத்தார் ட்விஸ்ட்..
பொதுவாக திருமணம் செய்யவிருக்கும் நடிகைகள் தாங்கள் ஒத்துக்கொண்ட படங்களை வேகவேகமாக முடித்துகொடுத்துவிட்டு சட்டுபுட்டென்று திருமணம் செய்துகொள்வார்கள். ஒன்றிரண்டு படங்கள் பாதியில் நின்றால் கூட திருமணம் முடிந்தபின் நடித்துக்கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்வார்கள். ஒருசிலர் கணவனின் அனுமதியுடன் மீண்டும் நடிப்பை தொடருவார்கள்.
சில வருடங்களுக்கு முன் ஜோதிகா, அவ்வளவு ஏன் கொஞ்ச நாளைக்கு முன் பீல்டுக்கு வந்து, சீக்கிரமாகவே திருமணம் செய்துகொண்ட அமலாபால் உட்பட பலரும் இந்தமுறையைத்தான் பின்பற்றினார்கள்.. ஆனால் த்ரிஷாவோ இதற்கு அப்படியே நேர்மாறாக, நிச்சயதார்த்தம் முடிந்த பின்புதான் புதுப்புதுப்படங்களில் ஒப்பந்தம் ஆக ஆரம்பித்துள்ளார்.
இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தங்களது படங்களில் நடிக்கும்படி அழைக்கத்தான் செய்வார்கள்.. பணம் வருகின்றதே என வருவதை எல்லாம் இழுத்துப்போட்டுகொண்டு உட்கார்ந்தால் அப்புறம் நிச்சயதார்த்தம் பண்ணியதற்கு என்ன அர்த்தம், திருமணத்திற்கு என்ன மரியாதை என இப்போதே மாப்பிள்ளை வீட்டுப்பக்கம் அரசால் புரசலாக பேச ஆரம்பித்து விட்டார்களாம்.
மணமகன் வருண்மணியனுக்கு காசு பணத்திற்கு ஒன்றும் குறைவில்லை.. ஆரம்ப ஜோரில், காதல் மயக்கத்தில் த்ரிஷாவின் போக்கிற்கு எல்லாம் பச்சைக்கொடி காட்டியவர் இப்போது த்ரிஷா தொடர்ந்து படங்களில் கமிட் பண்ணிக்கொள்வதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளாராம். அனேகமாக இது தொடர்பான சூடான செய்தி ஏதாவது விரைவில் வெளியாகலாம் என்றே சொல்கிறார்கள் வருண்மணியனைப்பற்றி நன்கு அறிந்த வட்டாரத்தினர்.