வழக்கமாக பிரபலங்களிடம் கதைசொல்லப்போகும் உதவி இயக்குனர்கள் சந்திக்கும் பிரச்சனை ஒன்றைத்தான் ஏ.ஆர்.முருகதாஸிடம் பணியாற்றிய இயக்குனர் ஒருவரும் சந்தித்துள்ளார். பிரபல இயக்குனரின் சீடர் என்பதாலும், சொன்ன கதை நன்றாக இருந்தது என்பதாலும் கதைகேட்ட அந்த இளம் நடிகர் தனக்கு நடிக்க சம்மதம் என ஒகே சொல்லிவிட்டாராம்.
கதை எழுதும்போதே படத்தின் நாயகி த்ரிஷா தான் என மைண்ட்செட்டில் கதை எழுதிய அந்த உதவி இயக்குனர், இதுபற்றி ஹீரோவிடம் ஒரு வார்த்தை கூட கலந்து பேசாமல், அன்றே த்ரிஷாவிடமும் அந்த கதையை சொல்லியிருக்கிறார்.. நல்ல கதை, தன்னைவிட வயது குறைந்த இளம் ஹீரோ என்பதால் உடனே த்ரிஷாவும் ஒப்புக்கொண்டு விட்டாராம்.
இப்போ பிரச்சனை என்னவென்றால் நாயகன் காட்டிய தயாரிப்பாளரிடம் அந்த உதவி இயக்குனர் கதையை சொல்ல அவர்களும் ஒகே சொல்லிவிட்டு, ஆனால் ஹீரோயினாக த்ரிஷா வேண்டாம், வேறு ஒருவரை போடலாம் என சொல்லிவிட்டர்களாம். சங்கடத்துடன் இந்த விஷயத்தை த்ரிஷாவின் காதுக்கு கொண்டு போனாராம் அந்த உதவி இயக்குனர்..
“அவ்வளவுதானே.. அந்த தயாரிப்பாளரை விட்டுத்தள்ளுங்கள்.. நான் ஒரு தயாரிப்பாளர் சொல்கிறேன்.. அவரைப்போய் பாருங்கள்” என த்ரிஷா தன் பங்குக்கு ஒரு தயாரிப்பாளரை கைகாட்டிவிட்டாராம்.. ஆனால் நாயகனோ நான் அந்த தயாரிப்பாளருக்கு வாக்கு கொடுத்துவிட்டதால் அவருக்குத்தான் படம் பண்ணவேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறாராம்.. வாய்ப்பு கிடைத்தும் அதை பயன்படுத்த முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் இருப்பது போல அல்லாடிக்கொண்டு நிற்கிறாராம் அந்த உதவி இயக்குனர்.