நிச்சயம் செய்யப்பட்ட மணமகனை வேண்டாம் என்றாலும், ஒப்பந்தமான படத்தில் இருந்து சொத்தை காரணங்கள் சொல்லி விலகுவது என்றாலும் த்ரிஷாவுக்கு எல்லாமே ஒண்ணு தான் போல.. சிம்புவை ஹீரோவாக வைத்து செல்வராகவன் இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமான த்ரிஷா தன்னிடம் கால்ஷீட் இல்லை என்று சொல்லி விலகிவிட்டார்..
ரசிகர்கள் த்ரிஷாவின் இந்தப்படத்தின் மூலமாவது த்ரிஷாவின் உண்மையான நடிப்பை பார்க்கலாம் என ஆவலுடன் இருந்தனர். காரணம் செல்வராகவன் – த்ரிஷா இருவரும் எட்டு வருடங்கள் கழித்து இந்தப்படத்தில் மீண்டும் இணைந்ததுதான். செல்வராகவனை ஜீனியஸ் என சொல்லி ஆனால் ஆவலுடன் ஒப்புக்கொண்ட த்ரிஷா இப்போது செல்வா – சிம்பு இருவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார்..
வருண்மணியன் வேண்டாம் என சொல்ல த்ரிஷாவுக்கு நூறு காரணங்கள் இருந்தாலும், செல்வா படத்தில் இருந்து திடீரென விலக இரண்டே காரணங்கள் தான்.. ஒன்று செண்டிமெட்.. இன்னொன்று துட்டு. ஏற்கனவே செல்வா, மற்றும் சிம்புவின் படங்கள் தொடர்ந்து மண்ணை கவ்வி வருகின்றன.. இருவரின் ராசி பற்றி சிலர் த்ரிஷாவிடம் சொல்லி அவரது மனதை கலைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேபோல செல்வராகவன்-சிம்பு என கூட்டணி வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்.. ஆனால் இன்னும் படத்திற்கு தயாரிப்பலரே கிடைக்கவில்லையாம். அதனால்தான் த்ரிஷாவை கதாநாயகியாக்கி போட்டோசெஷன் எல்லாம் நடத்தி அதிரடி அறிவிப்பு எல்லாம் வெளியிட்டார் செல்வராகவன்..
ஆனால் அதன்பின்னும் தயாரிப்ப்பாளர் மட்டும் கிடைத்தபாட்டை காணோம்.. அதுமட்டுமல்ல, த்ரிஷாவுக்கு அட்வான்ஸ் என இன்னும் எதுவும் தரவில்லை. அட்வான்ஸ் வாங்காமல் போட்டோஷூட்டில் நடிக்கலாம். ஆனால் படத்தில் நடிக்க முடியுமா..? இந்த காரணங்களினால்தான் த்ரிஷா பக்குவமாக படத்தில் இருந்து வெளியேறி விட்டாராம்.