பிரிக்க முடியாதது எது என்று கேள்வி கேட்டிருந்தால் கடந்த வருடம் வரை உதயநிதி-சந்தானம் கூட்டணி என அடித்து சொல்லியிருக்கலாம். அந்த அளவுக்கு பெவிக்கால் கூட்டணியாக இருந்தது இருவரின் நட்புக்கூட்டணி.. ஆனால் என்றைக்கு சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தாரோ அன்றைக்கு இந்த கூட்டணிக்கு பிடித்தது சனி.
அதுமட்டுமல்ல, தனக்கென தனி அடையாளம் வேண்டும் என்பதாலும், சந்தானத்தால் தான் தனது படங்கள் ஓடுகின்றன என்கிற மாயையை உடைக்கவும் தான், நான்காவதாக தான் நடித்துள்ள ‘கெத்து’ படத்தில் சந்தானத்தை கழட்டிவிட்டு, சூரியை சேர்த்துக்கொண்டார் உதயநிதி..
இதோ இப்போது தனது ஐந்தாவது படத்தில் விவேக்குடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இந்தப்படத்தை இயக்கும் இயக்குனர் அஹமதுவும் ஏற்கனவே தனது முந்தைய படங்களான ‘வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’ ஆகிய படங்களில் சந்தானத்தை காமெடி கூட்டணி சேர்த்தவர்தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.