இந்த பொங்கல் பண்டிகைக்கு உதயநிதி நடித்த ‘கெத்து’ படம் ரிலீசாகியுள்ளது.. முதன்முறையாக காமெடியில் இருந்து ஆக்சனுக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு முயற்சியை இந்தப்படத்தில் எடுத்துள்ளார் உதயநிதி. ஆனால் படத்தின் ரிசல்ட் அவர் எதிர்பார்த்த மாதிரி அமையவில்லை. அவரது ஆக்சன் அவதாரத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பில்லையா அல்லது படத்தின் கதை மற்றும் காட்சியமைப்புகளில் வலுவில்லையா என்கிற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம்.
ஆனால் இந்தப்படம் ரிலீசாவதற்கு முதல் நாளே படத்தை தனது நண்பர்களுக்கு உதயநிதி போட்டுக்காட்டினாராம். படத்தை பார்த்த நண்பர்கள் படம் சூப்பர் என பாராட்டி குவிக்க, அந்த உற்சாகத்தில் ரிலீசுக்கு முதல் நாளே சக்சஸ் மீட் எல்லாம் வைத்தாராம் உதயநிதி. அந்த வகையில் ‘அஞ்சான்’ படத்தின் ட்ரெய்லருக்கு சக்சஸ் மீட் வைத்த லிங்குசாமியை விட உதயநிதி ஒரு படி மேலே ஏறிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.