‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’ என்கிற பழமொழியை நமது முன்னோர்கள் சும்மா சொல்லிவைக்கவில்லை. அதை வைகைப்புயல் வடிவேலு தாமதமாகத்தான் புரிந்துகொண்டிருக்கிறார் ‘எலி’ படம் தயாரானபோதே அந்தப்படத்தை பற்றி ஆஹா ஓஹோவென பில்டப் கொடுத்தார் வடிவேலு..
இவ்வளவு கான்பிடென்ட் ஆக சொல்கிறாரே, அப்ப படத்துல ஏதோ ஒரு விஷயம் இருக்கு என நினைத்து அந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை ஐந்து கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வதாக பிரபல சேனல் நிறுவனம் ஒன்று வடிவேலு ஆபிசுக்கு தேடி வந்தது.
ஆனால் அப்போது, வடிவேலு கூட இருந்த அடிப்பொடிகள் அண்ணே ஒத்துக்காதீங்க அண்ணே.. உங்க பலம் உங்களுக்கு தெரியாதுண்ணே.. படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டாகும்.. அப்ப இன்னும் பெரிய ரேட் பேசலாம்ண்ணே என சொல்லி வடிவேலுவின் மனதில் ஆசையை தூண்டிவிட்டு ஆட்டையை கலைத்து விட்டார்கள்.
ஆனால் படம் ரிலீஸாகி பப்படமாகிப்போய்விட இப்போது எந்த சேனலும் வடிவேலு இருக்கும் திசைப்பக்கம் கூட தலைவைத்து படுக்கவில்லையாம். ‘அடடா பத்துக்கு ஆசைப்பட்டு அஞ்சை கொட்டைவிட்டுட்டேனே.. வட போச்சே’ என புலம்பாத குறையாக தனது அப்பரசெண்டுகளை கொலைவெறியுடன் தேடிக்கொண்டிருக்கிறாராம் வடிவேலு.