தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அஜித்தின் ‘வேதாளம்’ படத்திற்காக இதுவரை ஒரு பொதுவான டீசரும், இரண்டு பாடல்கள் டீசரும் மட்டுமே வெளியாகியுள்ளது. ரிலீசுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் இதுவரை ட்ரெய்லரை வெளியிடுவதற்கான எந்த அறிகுறியையும் காணோம்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் இயக்குனர் சிவா ஈடுபட்டிருப்பதால் ட்ரெய்லர் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இன்னும் சிலர் அனிருத் ட்ரெய்லருக்கான இசைக்கோர்ப்பு வேலையை முடிக்காததால் தாமதமாகிறது என சொல்கிறார்கள்.
இந்தநிலையில் ‘வேதாளம்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் படக்குழுவினர் அஜித் ரசிகர்களை ஏமாற்றிவிட்டனர். ட்ரெய்லர் வழக்கம்போல வியாழக்கிழமை வெளியாகும் என அறிவிப்பு வெளியானதால். நள்ளிரவு 12 மணியானதும் டிரைலர் வெளிவரும் என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால், ரசிகர்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.
இந்தநிலையில் ஒருவேளை தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்துவிட்டு அதன்பின்னர் அடுத்த வாரத்தில் ட்ரெய்லரை வெளியிட்டு புதுமை படைக்க ‘வேதாளம்’ குழுவினர் முடிவு செய்துள்ளார்களோ என விஜய் ரசிகர்கள் இப்போதே இந்த விவகாரத்தில் மூக்கை நுழைது ஓட்ட ஆரம்பித்து விட்டனர்.. போகிறபோக்கை பார்த்தால் அதுதான் உண்மையாகும்போல தெரிகிறது.