வட சென்னை படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அந்தப்படத்திற்கு ஏதாவது ஒரு சங்கடம் வந்துகொண்டேதான் இருக்கிறது. முதலில் சமந்தாவை ஹீரோயினாக ஒபந்தம் செய்தார்கள். அவரது திருமண அறிவிப்பை தொடர்ந்து அவர் விலகியதால், அதற்கு பதிலாக அமலாபாலை கதாநாயகி ஆக்கினார் வெற்றிமாறன்..
ஆனால் அமலாபாலின் விவாகரத்தை தொடர்ந்து, தனுஷ் படங்களில் அவர் தொடர்ந்து நடித்து வருவது அவரது குடும்பத்தில் தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதனால் தனுஷே வெற்றிமாறனிடம் சொல்லி, நீங்களே ஏதாவது காரணம் சொல்லி அமலாபாலை படத்தில் இருந்து தூக்கி விடுங்கள் என கேட்டுக்கொண்டாராம்.
அதன்படியே அமலாபால் கால்ஷீட்டில் சொதப்புகிறார் என மொக்கை காரணம் சொல்லப்பட்டு, படத்திலிருந்து நீக்கப்பட்டாராம். அவருக்குப்பதிலாகத்தான் தங்களது ‘காக்கா முட்டை’ கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்தும் விட்டார்கள்.