“நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாம நடந்து விடும். அப்படிப்பட்டதுதான் ‘என்னை அறிந்தால்‘ படத்தில் கிடைத்த வாய்ப்பு” என்று இன்ப அதிர்ச்சியை நினைவு கூர்ந்து தொடங்கினார் விக்னேஷ் சிவன். “கௌதம் சார்கிட்ட உதவி இயக்குனரா வேலை செய்யணும்னு பல நாள் ஏங்குனது உண்டு. அது இந்த பாட்டு எழுதுனது மூலம் அது நிறைவேறியுள்ளது.”
“ இப்பவும் எனக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை எல்லாம் கடவுளின் செயல். கௌதம் சார் பாட்டு எழுத சொன்னவுடன் தலை-கால் புரியல, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவுட்-லைன் எழுதி கொடுத்துட்டேன். பின்னர், ஹாரிஸ் சார் மெட்டுக்கு ஏற்றார்போல் சில வார்த்தைகளை சேர்த்து, மாற்றி பாடல் பதிவு செய்யப்பட்டது.”
“ கௌதம் சாரின் படத்தில் பாட்டு கதையை நகர்த்தி செல்லும். இப்பாட்டு ஒரு குத்து பாடல் மட்டும் கிடையாது. கதையின் முக்கியமான கதாபாத்திரங்களை பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைத்திருக்கும். பாட்டு எழுதப்படுவது ‘தல’ அஜீத் சாருக்கு என்பதாலோ என்னவோ எனக்கு பாட்டு ‘Positive’ ஆக வந்தது. அதனாலேயே “எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும்” என்று ஆரம்பிதேன்.
“நானும் ஒரு இயக்குனர் என்பதை தாண்டி தல ரசிகர்கள் இடையே எனக்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்ப்பு என்னை உற்சாகமூட்டுகிறது. ”
” எனக்கு வாய்ப்பளித்த கௌதம் சார், ஹாரிஸ் சார் மற்றும் தயாரிப்பாளர் AM ரத்னம் சார் அனைவருக்கும் நன்றி. எனக்கு வந்த வார்தைகள் வைத்து பாட்டு எழுதி இருந்தேன் அதை ஏற்றுகொண்ட ரசிகர்களுக்கு எனது நன்றிகள்” என்று நெகிழ்ந்து கூறினார் விக்னேஷ் சிவன்.