நடந்தது நடந்துபோச்சு.. நடக்காதது ஆட்டோவில் போச்சு என சாதாரணமாக தண்ணி தெளித்து விடுகிற விஷயம் இல்லை இது… ஒருபக்கம் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பாடலை எழுதி, அப்படித்தான் எழுதுவேன்.. என் பாத்ரூமுக்குள் ஏன் எட்டிப்பார்க்கிறீர்கள் என கேட்கிறார் மகன் சிம்பு.
ஐயா என் பையன் மேல தப்பு இல்ல…. அனிருத்தும் சிம்புவும் சேர்ந்துதான் மியூசிக் போட்டு, டம்மியா வார்த்தைகளை போட்ருக்காங்க.. அதை யாரோ சிம்புவோட செல்போன்ல இருந்து திருடி, வேற வார்த்தைகளை சேர்த்து இண்டர்நெட்ல போட்ருக்காங்க.. அப்படி போட்டவங்க மேல நடவடிக்கை எடுங்கன்னு காவல்துறைக்கு மனு போட்டாரே அவரோட அப்பா தமிழின காவலர் டி.ராஜேந்தர்.. அது அதை விட வெட்கக்கேடு..
பெற்ற பாசத்தால், தவறுசெய்யும் வாரிசுகளுக்கு வக்காலத்து வாங்கியே பழகிவிட்டதால், அவர்கள் செய்யும் தவறுகளின் வீரியம் தந்தைகளுக்கு உறைப்பதில்லை என்பது இவர் விஷயத்திலும் உண்மையாகிவிட்டது. இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக அவர்கள் செய்ததில் தவறு இல்லை என்றும் வாதிடுவார்கள்.. அதையே தான் இவரும் செய்கிறார்.
கொஞ்ச நாளைக்கு முன்பு புலி பட இசைவெளியீட்டு விழாவில் தன் மகனுக்கு உதவி செய்த விஜய்யை பாராட்ட சுந்தரத்தமிழில் முழங்கினார் டி.ஆர். இப்போது அவரின் மகன் பச்சைத்தமிழன் சிம்பு தான் ‘செந்தமிழ்’ வார்த்தைகளாக தேடிப்பிடித்து பாடல் எழுதியுள்ளார். போலீஸார் வலை வீசித்தேடிக்கொண்டிருக்கும் நிலையில் சிம்பு பண்ணிய காரியத்திற்கு, உதவிக்கரம் நீட்டி காப்பாற்ற, குரல் கொடுக்க, தன் ரசிகன் என்று அஜித்தும் வரமாட்டார்… ‘வாலு’ வெளிவர உதவிய விஜய்யும் வரமாட்டார்.. ஏன்னா பண்ணியிருக்க வேலை அப்படி..!