விஜய் ஆண்டனி படம் மீது நகுல் பகிரங்க குற்றச்சாட்டு..!


சுற்றி வளைக்காமல் விஷயத்திற்கு வருகிறோம்.. தீபாவளிக்கு சர்கார் படத்துடன், விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படமும் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் எதிர்பார்த்ட அளவு தியேட்டர்கள் கிடைக்காததால் படம் ரிலீசாகவில்லை. இப்போது வரும் நவ-16ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக விளம்பரங்கள் வந்துகொண்டு இருகின்றன. இது தான் நகுல் நடித்து வரும் நவ-1௬ஆம் தேதி வெளியாகவுள்ள ‘செய்’ படத்தின் மீது இடியை இறக்கியுள்ளது.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வழிக்காட்டலின்படி நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியாக அனுமதியளிக்கப்பட்ட ‘செய் ’படத்தை எந்தவித இடையூறும் இல்லாமல் வெளியிட உதவவேண்டும் என்று அப்படக்குழுவினர் திரையுலகினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.

ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் செய். இந்த படத்தில் நக்குல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராஜ்பாபு.

‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதன் போது படத்தின் நாயகன் நகுல் பேசுகையில், ‘இந்த படத்தை நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியிடலாம் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு அனுமதி கடிதம் கொடுத்தது. ஆனால் தற்போது ‘செய் ’திரைப்படம் திட்டமிட்டபடி நவம்பர் 16 ஆம் தேதி வெளியாகும். ஆனால் 150 ஸ்கீரின்களுக்கு பதிலாக 60 அல்லது 70 ஸ்கிரீன்களில் தான் வெளியாகும் என்றிருந்தது. இதையறிந்ததும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தோம்.

காரணம், அந்த தேதியில் விஜய் ஆண்டனி நடித்த ‘திமிரு புடிச்சவன் ‘என்ற படமும் வெளியாகும் என்றும் சொன்னார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். திட்டமிட்டப்படி, செய் 150 ஸ்கிரீனில் வெளியாகுமா? ஆகாதா? என்ற மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறோம்.

எங்களுடைய படத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியீட்டிற்கான அனுமதி கடிதம் அளித்திருக்கிறார்கள். ஆனால் அந்த படத்திற்கு இதுவரை வழங்கவில்லை என்று கேள்விப்படுகிறோம்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவர்கள் எங்களுடைய படத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய படமான ‘செய் ’படத்தை திட்டமிட்டபடி வெளியிட உதவுங்கள் என்று திரையுலகில் உள்ள அனைவரிடம் அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறோம்.’ என்றார்.