முதல் இரண்டு படங்களில் சீரியஸாக நடித்ததால், அடுத்ததாக பி&சி ரசிகர்களிடம் ரீச்சாகவேண்டும் என முடிவு செய்து, முதல் இரண்டு படங்களில் மெனக்கெட்டதுபோல இல்லாமல், லாஜிக்கையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தில் காமெடி கொத்து பரோட்டா போட முயற்சித்தார் விஜய் ஆண்டனி..
படம் காமெடி என்கிற பளேவரில் தயாராகி இருந்தாலும் விஜய் ஆண்டனி தனியாக காமெடி பண்ண முயற்சிக்காமல், பெரும்பாலும் காமெடி காட்சிகளில் அண்டர்ப்ளே செய்தே சமாளிக்க முயற்சி செய்தது நன்றாகவே தெரிந்தது.
படத்தை பார்த்த விஜய் ஆண்டனியின் நலம் விரும்பிகள் பலரும், அவரை திரும்பவும் சீரியஸ் ரூட்டுக்கே மாறிவிடுவதுதான் உங்களுக்கு செட்டாகும் என ஆலோசனை கூறியுள்ளார்கள். படத்தின் விமர்சனங்களும் அந்த ரீதியில் தான் இருந்ததால், இனி சீரியஸ் ரூட்டிலேயே சீராக பயணிப்பது என முடிவு செய்துள்ளாராம் விஜய் ஆண்டனி.
அதனால் தற்போது ஒரே நேரத்தில் பிச்சைக்காரன், திருடன் ஆகிய படங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி, இனி ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்துவது என முடிவு செய்துள்ளார். அதனால் ‘திருடன்’ படத்தை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு முதலில் பிச்சைகாரன் பட வேலைகளில் பிசியாகிவிட்டார். சீரியஸ் ரோல் என்றாலும் அதில் கூட கதைக்கும் கேரக்டருக்கும் ஏற்றவாறு வெரைட்டி காட்டவும் முடிவு செய்துள்ளாராம் விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன் படத்தின் பஸ்ட் லுக் டீசெர் வரும் ஆகஸ்ட் 21 ம் தேதி வெளியாகிறது.