இதுவரை தனது வாழ்நாளில் விஜய் பெரிய அளவில் கெட்டப் சேஞ்ச் பண்ணி நடித்ததில்லை… அதற்காக மேனக்கேட்டதும் இல்லை.. அதை விரும்புவதும் இல்லை.. காரணம் அவருக்கு அது செட்டாவதும் இல்லை. அதனாலேயே அவரது ரசிகர்கள் அவர் வகிடு எடுத்து சீவினாலோ, பின்னாடி முடியை கொஞ்சம் குறைத்தாலோ அதையே கெட்டப் சேஞ்ச் என கொண்டாடி திருப்திப்பட்டுக்கொள்கின்றனர்.
பிரண்ட்ஸ் படத்தில் கூட க்ளைமாக்சில் மொட்டையடித்து அதில் கொஞ்சூண்டு முடி வளர்ந்திருந்த அந்த கெட்டப்புக்கே எங்க தலைவர் புது கெட்டப்புல நடிச்சுருக்கார்னு கொண்டாடின பயங்க தான நம்ம ஆளுங்க… அதுல இருந்து கெட்டப் மாத்தணுமா இல்லை இயக்குனரை மாத்தணுமா என்கிற கேள்வியை கதைசொல்ல வரும் இயக்குனர்களிடம் முன்வைப்பதால் வருபவர்களும் அது பற்றி கப்சிப்..
ஆனால் இயக்குனர் சிம்புதேவன் ‘புலி’ கதையை சொல்லிவிட்டு அதில் உள்ள தந்தை கேரக்டருக்கு வேறு கெட்டப் போட்டே ஆகவேண்டும் என சொல்லிவிட்டார்.. வேறுவழியின்றி கருகரு மீசை (இது கூட ஒரு கெட்டப் சேஞ்ச் தான்), நீளமாக வளர்த்த தலைமுடி என அவர் குதிரையில் என்ட்ரி ஆகும்போது, நம்ம தலைவருக்கு ஏன் இந்த வீண் வேலை என விஜய் ரசிகர்களே சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். படம் பார்க்காதவர்கள் பார்த்து, தாரளமாக சிரித்துவிட்டு வாருங்கள்..