தன்னுடைய படங்கள் ரிலீஸ் சமயத்தில் ஏதோ ஒரு ரூபத்தில் சர்ச்சையை சந்தித்துக்கொண்டு இருப்பதால், ஒவ்வொரு பட ரிலீசின் முன்பும் ஏதாவது ஒரு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு, ‘கடவுளே.. இனி நீ பாத்துக்கப்பா’ என தனது பிரச்சனைகளை அங்கே உள்ள உண்டியலில் போட்டுவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார் விஜய்.
‘ஜில்லா’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடைபெற்ற நவகிரக சாந்திஹோமத்தில் கலந்து கொண்டார் விஜய். இதற்காக வழக்கமாக நான்கு மணிக்கு ஆரம்பிக்கும் சனீஸ்வரன் கோவில் சிறப்பு பூஜை, விஜய்க்காக மூன்று மணிக்கே ஆரம்பிக்கப்பட்டதால் பக்தர்களின் கண்டனத்திற்கு ஆளாகி சர்ச்சையில் சிக்கினார்.
இந்த முறை ‘புலி’ நல்லபடியாக ரிலீஸாக வேண்டி ஒரு கோவிலுக்கு போக முடிவெடுத்த விஜய், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலை டிக் பண்ணினார்.. கடந்தமுறை போல சர்ச்சைகள் எதுவும் வந்துவிட கூடாது என்பதால் தான் மாறுவேடத்தில் போய் ஆண்டாளை தரிசனம் செய்தவிட்டு வந்துள்ளார்..
மண்டையில் இருக்குற கொண்டையை மறைக்க முடியாமல் மாறுவேடம் போட்ட வடிவேலு போல, விஜய் எந்த வேஷம் போட்டாலும் பளிச்சுன்னு தெரிந்துவிடுமே.. அதைக்கூடவா நம்ம ஆட்களால் கண்டுபிடிக்க முடியல… ஆக ஆண்டாள் அருளால் விஜய் கெட்டப் முதன்முறையாக இந்த இடத்தில் சக்சஸ் ஆகியிருக்கு.. புலிக்கு பிரச்சனை வெளியே என்றால் அம்மன் பார்த்துக்கொள்வார். புலியே பிரச்சனை என்றால் அம்மனால் என்ன செய்ய முடியும்..?