நம் திரையுலகில் ஒரு வழக்கம் உண்டு.. ஒரு காலத்தில் ஹிட் கொடுத்து, தற்போது சரிவுகளை தொடர்ந்து சந்திக்கும் இயக்குனர்கள் தாங்கள் இயக்கிய வெற்றிப்படத்தின் இரண்டாம் பாகத்தை துவக்கி விடுவார்கள்.. அவையும் கூட ஓடாது என்பது வேறு விஷயம்..
இதற்கு கோலிசோடா’ இயக்குனர் விஜய் மில்டன் மட்டும் விதிவிலக்காகி விடுவாரா என்ன..? விஜய் மில்டனின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘கோலி சோடா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கிய ‘கடுகு’, ’10 எண்றதுக்குள்ள’ போன்ற திரைப்படங்கள் மண்ணை கவ்வின..
அதனால் தற்போது ‘கோலி சோடா 2’ பாகத்திற்கான பணிகளை துவங்கிவிட்டார்