இந்த நான்கு வருட காலங்களில் தனது படங்களில் அரசியல் பற்றி விஜய் அடக்கி வாசித்தார் என்பதை விட, அடக்கி வாசிக்க வைக்கப்பட்டார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். சென்சார் மற்றும் ரிலீஸ், வரிவிலக்கு என் அப்ள தரப்பிலும் பிரச்சனைகளை சந்தித்ததால் படங்களில் பெரிதாக அரசியல் பேசவில்லை..
புலி படத்தில் கூட முதல்வர் ஜெயலாளிதாவி நல்லவர் என்றும் அவரை சுற்றி இருப்பவர்களால் தான் அவருக்கு கெட்ட பெயர் என்றும் ஸ்ரீதேவி கேரக்டர் மூலமாக மறைமுகமாக சொல்லியிருந்தார். அதற்கே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. இப்போது நடித்து வரும் ‘தெறி’ படம் போலீஸ் படம் என்பதால் அதில் ஓரளவுக்கு மேல் அரசியல் பேச முடியவில்லையாம் விஜய்க்கு.
அதானால் இந்தப்படத்தி தொடர்ந்து அடுத்து இதே அட்லி டைரக்சனில் முழுக்க முழுக்க அரசியல் பேசும் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறாராம் விஜய். இதற்கான தைரியம் எங்கிருந்து வந்தது என்றால் எப்படியும் இன்னும் சில மாதங்களில் ஆட்சி மாறப்போகிறது தானே என்கிற நம்பிக்கையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளாராம் விஜய்.